ADVERTISEMENT

நீண்ட விசாரணைக்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டார்: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்!

07:22 AM Aug 03, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் இருந்து கட்டுமானப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 11-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மணல், கல், ஜல்லி போன்றவை விர்கோ 9 என்ற இழுவைக் கப்பல் மூலம் மாலத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 கப்பல் ஊழியர்களும் ஒரு தமிழரும் இருந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மாலத்தீவில் பொருள்களை இறக்கிய பின்னர் கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. திரும்பி வந்த அந்தக் கப்பலில் கூடுதலாக ஒரு நபர் இருந்தார். இதனை அறிந்த இந்திய கடலோரக் காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் நுழைவதற்கு முன்பாக அந்தக் கப்பலை தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் கப்பலில் ரகசியமாக ஏறி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.




மத்திய அரசின் அறிவுரையின் பேரில் அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அகமது ஆதீப் வந்த இழுவை கப்பலிலே அவரை சர்வதேச எல்லையில் மாலத்தீவு கடற்படையினரிடம், இந்திய கடலோர காவல்படையினர் ஒப்படைக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT