Skip to main content

இரட்டை கொலை வழக்கிலிருந்து பெயரை நீக்க மலேசியா டிரிப், ராயல் என்பீல்டு... கசிந்த உளவுத்துறை குறிப்பு..!!!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

 

police
"எஸ்பி சென்றதால் கிடா விருந்து வைத்தாரா தனிப்பிரிவு காவலர்?" என தலைப்பிலிட்டு முகவரியின்றி மொட்டையாக வெளியான "வாட்ஸ் அப்" பதிவு ராமநாதபுர மாவட்டக் காவல்துறையையே கலங்கடித்துள்ளது என்றால் அது மிகையல்ல..!!

 

   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியில் இருக்கும் முரளி என்பவர் (த .கா:1300) 2016-ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் நகர், பஜார் காவல் நிலையங்களில் பணிபுரிந்து தற்சயம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அயல்பணியாக தனிப்பிரிவு காவலராக இருந்து வருகிறார். இவரைக் குறிவைத்து, "எஸ்பி சென்றதால் கிடாவிருந்து வைத்தாரா தனிபிரிவு காவலர்? எனத் தலைப்பிலிட்டு, ராமநாதபுரத்தில் போதை பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த எஸ்பி வருன்குமார் தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார். 

   இந்நிலையில் கேணிக்கரை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக உள்ள முரளி என்பவர் கடந்த வாரம் அழகங்குளம் தோப்பில் கிடாய் வெட்டி விருந்து கொடுத்துள்ளார். இதில் கேனிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரபு கலந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களின் முக்கியஸ்தர்கள். அதுமட்டும் இல்லாமல் டிஐஜி அலுவலகம் அருகே நடந்த இரட்டை கொலை தொடர்பாக சாத்தான்குளத்தை சேர்ந்த பிரபல தொழலதிபர் ஒருவர் சம்மந்தப்பட்ட இரட்டை கொலை வழக்கில் இருந்து தனது பெயரை எடுப்பதற்காக புல்லட் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இவர் மூலமாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலர் மலேசியா நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் தற்போது உளவுப்பிரிவு செல்ல இருப்பதால் 7 கிடாய் வாங்கி வைத்துள்ளார் அடுத்தகட்ட விருந்திற்காக. பயிற்சி முடித்து எஸ்பி வருவதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் என்று காவல்துறை சார்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்." என வாட்ஸ் அப் பதிவு மாவட்டம் முழுமைக்கும் சுற்ற, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மையறிய தனக்கு நெருக்கமான உளவுப்பிரிவு அதிகாரிகளையே களமிறக்கினார் பயிற்சிலிருக்கும் எஸ்.பி. வருண்குமார்.

 

  வருகின்ற 29ம் தேதி பயிற்சி முடிந்து பணிக்கு திரும்பும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்காக காத்திருக்கின்றது  உளவுப்பிரிவு குறிப்போ, "எஸ்பி சென்றதால் கிடா விருந்து வைத்தாரா தனிப் பிரிவு காவலர்?" என்று முகவரி இன்றி "வாட்சப்" பதிவில் வந்த விபரத்தின் அடிப்படையில் தனிப்பிரிவின் மூலம் ரகசிய விசாரணை செய்ததில், " கடந்த 09.02.2020 அன்று தனது இளையமகள் பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு பழக்கமான இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் எதிரே உள்ள தாஜ் போட்டோ ஸ்டூடியோவின் உரிமையாளருக்கு சொந்தமான அழகன்குளம் கடற்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியும்,மதிய அசைவ உணவு விருந்தும் கொடுத்துள்ளார். இந்த விருந்தில் கேணிக்கரை ஆய்வாளர் பிரபு, சார்பு ஆய்வாளர் முருகநாதன் மற்றும் தனது உறவினர்கள் உட்பட பழக்கமான நண்பர்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

 

   16.10.2018ம் தேதி ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் அவர்களது முகாம் அலுவலகம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கார்த்திக் த/பெ சூரப்புலி (எ) சுப்பிரமணியன் வாலாந்தரவை என்பவரும் அவரது நண்பர் விக்னேஷ் பிரபு த/பெ தவமணி, கருவேப்பிலைக் காரத்தெரு என்பவரும் கொலை செய்யப்பட்டதில் கேணிக்கரை Cr: No : 289/18 u/s 120B,147,148,149,302 and 5 of Explosive substance Act,,, வழக்கின் இரண்டாவது எதிரியான சாத்தான்குளம் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு இந்தியா மற்றும் மலேசிய நாடுகளில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், சூப்பர் மார்க்கெட் போன்றவை உள்ளன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளின் புலன் விசாரணையில்,  மேற்படி சாத்தான்குளம் தொழில் அதிபருக்கு தொடர்பு இல்லை என்ற நிலையில் இவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த காலகட்டத்தில் தனிப்பிரிவு காவலர் முரளி கிருஷ்ணன் புதியதாக ஒரு புல்லட் பைக் வாங்கியுள்ளார். மேலும் 2019 ம் ஆண்டு  தனது உறவுக்காரரின் திருமண நிகழ்ச்சி மலேசியாவில் நடந்ததாக காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று தனது மனைவியுடன் மலேசியா சென்று 15 நாட்கள் இருந்து வந்ததாகவும் அதற்கான ஏற்பாட்டை மேற்படி கொலை வழக்கின் முதலாவது எதிரியும், இரண்டாவது எதிரியாக இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட சாத்தான்குளம் தொழில் அதிபரும் செய்து கொடுத்ததாக தெரிய வருகிறது. தனிப்பிரிவு காவலர் முரளிகிருஷ்ணன் "SBCID எனும் உளவுத்துறைக்கு சென்றவுடன் 7 கிடா" வெட்ட உள்ளது பற்றி ரகசிய விசாரணை செய்ததில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவிற்கு குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் நேர்த்தி கடன் செலுத்துவற்கு "ஆட்டு கிடா" வாங்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது." என்றுள்ளதாக தகவல் கசிகின்றது.

 

  எஸ்.பி.வருண்குமாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்..? என்பதே காவல்துறை ஆளிநர்களின் பந்தயக் கேள்வி..?


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ammonia gas leak in factory Public damage

கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இந்த ஆலை செயல்படாத முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் இந்த ஆலையை வேறு ஒருவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் புதிய உரிமையாளர் பல மாதங்காளாக செயல்படாமல் இருந்த ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது தொழிற்சாலையில் இருந்த சிலிண்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வாயு கசிவு சம்பவத்தால் ஆலையைச் சுற்றியுள்ளா 2 கி.மீ. தொலைவிற்கு வசிக்கும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சணை போன்ற பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நிலைமை முழுமையாக சீரான பிறகு இன்று (30.04.2024) சுகாத்தாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். தொழிற்சாலையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.