Advertisment

40 நாள் கழித்து மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த 178 பேர்!

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப அந்தெந்த நாடுகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல இந்தியாவில் தங்கி உள்ள வெளிநாட்டினர், அவரவர் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மலேசியாவில் இருந்துதாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது.

Advertisment

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 178 பயணிகளுடன் வந்த விமானம், திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து பேருந்துகள் மூலம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

அங்கு தங்க விருப்பம் இல்லாதவர்கள் ஏற்கனவே புக் செய்து உள்ள விடுதியில் அவர்கள் சொந்த செலவில் தங்கிக்கொள்ளலாம். முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விமான நிலையம் சென்று மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் தவித்து வந்தவர்கள் திருச்சி வந்து இறங்கியது அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

airport Tiruchirappalli Malaysia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe