Skip to main content

மலேசியா திரும்ப முடியாமல் தவித்த 179 பேர்... உதவிக்கரம் நீட்டிய தமிழர்!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த 179 மலேசியத் தமிழர்களைத்  தனி விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பி வைத்த தமிழரின் செயல்  பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒரே சொல் 'கரோனா'. வல்லரசு நாடுகள் முதல் வறுமையில் தவிக்கும் நாடுகள் வரை கரோனா வைரஸால் உயிர் பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 22-ந்தேதி முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
 

malasiya peoples tamilnadu helped tamil

 

இதனால் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்த மலேசியத் தமிழர்கள் செய்வதறியாது தவித்தனர்.அவர்கள் மலேசிய நாட்டிற்குச் செல்ல வழியின்றி 14 நாட்கள் முடங்கினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார்,மலேசியா திரும்ப முடியாமல் நிற்கதியாய் தவிக்கும் மலேசியத் தமிழர்களை எப்படியாவது சொந்த நாட்டிற்கு அனுப்பிட திட்டமிட்டார்.
 

 

malasiya peoples tamilnadu helped tamil


அதன்படி தமிழகத்தில் பரிதவிக்கும் மலேசிய தமிழர்களின் விபரங்களைச் சேகரித்து முதற்கட்டமாக 179 பேரை மலேசியாவிற்கு அழைத்துசெல்வது என முடிவெடுத்தார்.

இதைத்தொடர்ந்து அவரது ப்ளஸ் மேக்ஸ் குரூப் நிறுவனத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் செலவில் தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே இந்தியா மற்றும் மலேசியா என இருநாட்டு அரசாங்கங்களிடம் பேசிய டத்தோ பிரகதீஷ் குமார், விபரங்களை எடுத்துக்கூறினார்.
 

malasiya peoples tamilnadu helped tamil



அவரின் நல்லெண்ண முயற்சிக்கு இருநாட்டு அரசும் சம்மதிக்க, மலேசிய தமிழர்களை மலேசியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் மளமளவென நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து டத்தோ பிரகதீஷ் குமார் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த தனிவிமானம் திருச்சி விமான நிலையத்தில் தயாராய் இருந்தது.
 

malasiya peoples tamilnadu helped tamil


இதுபற்றிய தகவல் தமிழகத்தில் இருந்த 179 மலேசியத் தமிழர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் உற்ற நேரத்தில் உதவிய டத்தோ பிரகதீஷ் குமாருக்கு நன்றி தெரிவித்த பின்னர் சொந்த நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். 


"தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவருக்கொரு குணமுண்டு"! என்று நாமக்கல் கவிஞன் பாடியது டத்தோ பிரகதீஷ் குமார் போன்றோரை மனதில் வைத்துதான் என்றால் அதுமிகையல்ல.!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.