Skip to main content

'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தைத் தொடங்கி வைத்த மேயர்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று (03.05.2023) இராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிகழ்வில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.