மக்கள் பாதை அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர்கள் அணி!

makkal pahai leaders neet exam police

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பினர் சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் பாதை அமைப்பின் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த ஆறு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த மக்கள் பாதை அமைப்பு நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தாத சூழ்நிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இன்று காலை சென்ற காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்வதோடு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க அனைத்து கட்சிகளோடு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Chennai makkal pathai police
இதையும் படியுங்கள்
Subscribe