/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren_0.jpg)
திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் வீட்டில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியைச்சேர்ந்தவரும் தொழிலதிபருமான வீரசக்தி என்பவரின் வீடு மற்றும்அலுவலகத்தில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர். வீரசக்தி, உணவகம் ஒன்றை நடத்தி வருவதுடன்நியூ மேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக உள்ளார். அந்த நிதி நிறுவனம் முதலீடு பெற்று மோசடி செய்ததாகவீரசக்தி உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் அவருடைய வீடு மற்றும்அலுவலகத்தில் சோதனை நடத்திஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)