Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது 66- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள், தொண்டர்களை சந்தித்தார். அப்போது தொண்டர்கள் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதேபோல் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.