திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா ஒன்றிய செயலாளர் மனோதீபன் தலைமையில் நடந்தது.

Advertisment

makkal needhi maiam party third year anniversary celebration in dindigul district

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு கடலைமிட்டாய் வழங்கினார். அதன் பின் பேசும்போது, "தமிழகத்தில் திராவிட கட்சிகளான இரண்டு மலைகளுக்கு இடையே புகுந்து புறப்படும்போது வேராக கமலஹாசன் புறப்பட்டுள்ளார். மற்றவர்களைப்போல் உடல்நலத்தைக் கெடுக்கும் சாக்லெட், லட்டு என்று கொடுக்காமல் உங்கள் நலனை காக்கும் கடலை மிட்டாயை கொடுக்கின்றோம்.

களங்கபடமில்லாத எங்களுக்கு ஆதரவு கொடுத்து கமல்ஹாசனை முதல்வராக்குவதற்கு முடிந்தவரை ஒத்துழைப்பு கொடுங்க மக்களே" என்று பேசினார். பின்பு விரு விரு, விரு, மாண்டி விருமாண்டி என்ற பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டு கிராமந்தோறும் கொடியேற்ற சென்றனர்.