Published on 12/06/2021 | Edited on 12/06/2021

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் கமல்ஹாசனின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "நவீன உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தகாது. பள்ளிகளும் திறவாத சூழலில், வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தப்படும் சிறாரை நினைக்கப் பதைக்கிறது. நம் நாகரிகம் மேம்படட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.