மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் அவர் பேசியுள்ளதாவது,

Advertisment

makkal needhi maiam kamalhasan release new video

எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? தப்பை தட்டிக்கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா? கொஞ்சம் கூட அறிவு வேணாமாஎங்கு பேனர் வைக்க வேண்டும், வைக்க கூடாது என அதிகாரிகளுக்கு தெரியாதா? அரசங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரைவேக்காட்டு அரசியல்வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் போக போகிறதோ? இந்த மாதிரியான ஆட்கள்மீது எனக்கு மயிரிலையளவுகூட மரியாதை கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்து கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக அந்த தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும்.

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என கூறியுள்ளார்.