makkal needhi maiam kamal hassan tweet

Advertisment

'பழிபோடும் அரசியலை முதல்வர் நிறுத்த வேண்டும்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்'என்று குறிப்பிட்டுள்ளார்.