Published on 21/02/2021 | Edited on 21/02/2021

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு விழா துவக்க நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன், "நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். சீமான், சரத்குமாரும் எங்கள் அணிக்கு வரலாம்; மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் வரலாம். நல்லது எங்கிருந்தாலும் மக்கள் தேடி எடுத்துக்கொள்வார்கள். தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம். மூன்றாவது அணி மலர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.வில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தூதுவிட்டதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. தி.மு.க., அ.தி.மு.க. என்னிடம் நேரடியாகப் பேசவில்லை" என்றார்.