Published on 18/08/2021 | Edited on 18/08/2021

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.