Skip to main content

இ.பி.எஸ். தொகுதியில், மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராம சபை! ஜனவரி 7-ஆம் தேதி நடக்கிறது!!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

makkal grama sabha meeting peoples salem dmk mk stalin


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக அன்று காலை, தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். 

 

இதையடுத்து, ஜன. 8-ஆம் தேதி காலை நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, மாலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி, ஜனவரி 9-ஆம் தேதி காலை மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, மாலையில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி, ஜனவரி 10-ஆம் தேதி சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் நடக்கும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். 

 

சார்ந்த செய்திகள்