Skip to main content

ஜனவரி 20-ஆம் தேதி வரை "மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்" - தி.மு.க. தலைமை அறிவிப்பு!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

makkal grama sabha meeting extended dmk announced

 

மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் ஜனவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 10 வரை தமிழகம் முழுவதும் 16,500, "மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்" நடத்திட வேண்டுமென மாவட்ட, மாநகர கழகச் செயலாளர்கள், ஒன்றியம் நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் "மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்", சில மாவட்டங்களில் பெருமழை காரணமாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் வைத்த கோரிக்கையினையேற்று, 2021 ஜனவரி 20-ஆம் தேதி வரை "மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்" நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்