Skip to main content

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அழைப்பு! 

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

makkal grama sabha at cuddalore dmk mk stalin

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திராளானோர் பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்" என்ற தலைப்பில் "மக்கள் கிராம சபை" கூட்டம் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நாளை (04/01/2021) மாலை 03.00 மணியளவில் மக்கள் கிராம சபைக் கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தெற்கு ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெறவுள்ளது.  அதுசமயம் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் மதியம் 12.00 மணியளவில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது. 

 

வரவேற்பு நிகழ்ச்சியிலும் மற்றும் மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுபினர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, தொழிலாளர் முன்னேற்றச்சங்கம் ஆகிய அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கழக முன்னோடிகள், கழக தோழர்களும், விவசாயிகளும், இளைஞர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்