மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் அமைப்புகள் மீதும், சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, சேப்பாக்கத்தில் துவங்கிய இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். உடன் கலந்துகொண்ட சிறுவர், சிறுமிகளும் அரசுக்கு எதிரான கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை சுமந்தபடி முழக்கங்களை எழுப்பினர்.
“என் அப்பா மீது 20 பொய் வழக்குகள்! என் மீது எப்போது வழக்கு?”- அரசை எதிர்த்து சீரும் சிறார்கள். (படங்கள்)
Advertisment