Advertisment

“இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்”- நீதிபதி!

publive-image

கரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும் வகையில் உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

அந்த மனுவில், கரோனாவுக்கு பலியானவர்களுக்கு உரிய முறையில் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனாவால் பலியானவர்களுக்கு, கரோனா காரணமாக பலியானதைக் குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும் வகையில், உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Advertisment

highcourt sanjeeb banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe