தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு, இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை தமிழகம் முழுவதும் இயங்க ஆரம்பித்துள்ளன. சென்னையிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலை முதலே சென்னையின் முக்கிய இடங்களில் வாகன போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டது. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருபக்கமும் வாகனங்கள் வரிசையில் சென்றன. அதேபோல் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் குவிந்ததால் வழக்கம்போல கூட்ட நெரிசல் ஏற்பட்டது.