/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1829_0.jpg)
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்என்ஜிஓ காலனி அருகே இயங்கி வரும் 'சிட்டி' என பெயர் கொண்ட தனியார் எலும்பு முறிவுமருத்துவமனையில் இரவு 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனைஎன்பதால் பல இடங்களுக்கும் தீ பரவியுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனடியாகதீயணைப்புத்துறைக்குதகவல் கொடுக்கப்பட்டது. உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் அணிவகுத்துள்ளது. மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.இதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விபத்தில்முதற்கட்டமாக வெளியான தகவலின்அடிப்படையில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள், ஒரு சிறுவன் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.தகவலறிந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விபத்து நடந்த மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். தீ விபத்து தொடர்பான விவரங்களை கேட்டறிந்த அவர்,அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரிக்க உள்ளார். அதேபோல் இறந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியள்ளது.
மாவட்ட கலெக்டர் பூங்கொடி, எஸ்பி பிரதீப் ஆகியோரும் விபத்து நடந்த இடத்தில் விசாரணையில் இறங்கியுள்ளனர். தீவிபத்தால் அந்தபகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)