Advertisment

மனிதநேய ஜனநாயக கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா! அன்னதானம் வழங்கிய பிரமுகர்கள்

Majaga 7th year celebration

மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் கட்சிக் கொடி ஏற்றுதல், ரத்த தானம் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். அதன் ஒரு நிகழ்வாக கோவையில் உள்ள பேரூர் அன்பு இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் அங்குள்ள முதியோர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் உணவு வழங்கி பரிமாறினர். மேலும் அவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கான தேவைகள்குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் அதன் தொடர்ச்சியாக அவர்களின் தேவைகளை ம.ஜ.க.வினர் செய்து கொடுப்பதாக அன்பு இல்ல நிர்வாகிகளிடம் கூறினர்.

Advertisment

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனிஃபா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் சையது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

mjk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe