Skip to main content

மக்காச்சோளம் விதைச்சோம்…மனம் புழுங்கி நிக்கிறோம்..!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், புதூர் சுற்றுவட்டாரத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வட்டாரத்திலும் மக்காச்சோளம் பயிர்களை படைப்புழுக்கள் தாக்குவதால், விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

 

stand with mind melts and withers

 

மக்காச்சோளம் பயிரின் இலைகளை புழுக்கள் அரித்து பச்சையம் இல்லாமல், திட்டுத் திட்டாக வெண் புள்ளிகளாக காட்சியளிக்கின்றன. பயிரின் உட்பகுதிக்குள் படைப்புழுக்கள் சென்று, தட்டை மற்றும் கதிரை சேதப்படுத்துவதால், மகசூல் அடியோடு பாதித்துவிட்டது என வெம்பி நிற்கின்றனர் விவசாயிகள்.

 

இதுதொடர்பாக பாரதிய கிசான் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரங்கநாயலுவிடம் பேசினோம். “பயிர் முளைவிடும் குருத்து பகுதியை புழுக்கள் அரித்துவிடுவதால், மகசூல் முழுவதும் பாதித்து விடுகிறது. அமெரிக்காவில் இருந்து மான்சான்டோ என்ற நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த கலப்பின விதைகள் தான் இதற்கு காரணம். இந்திய தயாரிப்பான டாடா நிறுவனத்தின் விதைகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வினியோகம் செய்த “கிரிப்கோ” நிறுவனத்தின் விதைகளில் இந்த பாதிப்பு இல்லை, எனவே, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்புக்கு என்ன காரணம்? என்பதை கண்டறியவேண்டும். விதைதான் காரணம் என தெரியவந்தால், அந்த நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்றார்.

 

stand with mind melts and withers

 

இதுகுறித்து பேசிய புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் முருகப்பனோ " மான்சான்டோ நிறுவனத்தின் கலப்பின விதைகள் தான் இதற்கு காரணம் என்பது நிரூபிக்கபடவில்லை. பயோனியர், என்.சி.எல் போன்ற நிறுவனங்களின் விதைகளை வாங்கி விதைத்த மக்காச் சோள பயிர்களையும் படைப்புழுக்கள் தாக்கி உள்ளன” என்றார். அவரே தொடர்ந்து, “ பயிர் வைத்த 15-25 நாட்களுக்குள் குளோரிபைரிபாஸ், இமாமெக்டின் பென்சோயேட் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தால், படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றலாம். 45 நாட்களுக்கு மேற்பட்ட பயிர் என்றால், மருந்து தெளிப்பது சற்று கடினம், அப்போது, குருத்து பகுதியில், 4 மணிக்கு மேல் மருந்து தெளிக்கலாம். அப்போது தான், புழுக்கள் வெளியே வரும். மேலும் இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள்  15-01-2019-க்குள் பயிர் காப்பீடு செய்தால், காப்பீட்டுத் தொகை பெறுவற்கும் வழிவகை இருக்கிறது’’ என்ற யோசனையையும் அவர் தெரிவித்தார்.

 

 

மழையை மட்டும் நம்பி மானாவாரி பயிர்களை மட்டுமே இந்த பகுதியில் சாகுபடி செய்ய முடியும். சென்ற ஆண்டு இந்த பகுதி விவசாயிகள் உளுந்து, பாசிபயறு அதிகம் சாகுபடி செய்திருந்தனர். ஒக்கி புயலுக்கு முன்பு கடுமையான வெயில் அடித்ததால், மஞ்சள் தேமல் நோய் பரவி பாதிப்பு ஏற்பட்டது. மீதம் இருந்த பயிர்களும் ஒக்கி புயலால் சேதமடைந்துவிட்டது. எனவே, இந்த முறை பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு மாறினர். இதில் செலவு குறைவு ஒருமுறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துவிட்டு, 2 முறை உரம் போட்டால், 90-110 நாளில் மகசூல் எடுத்திடலாம் என நம்பி பயிர் செய்தனர். ஆனால் மொத்தமும் போச்சே என்ற புலம்பி நிற்கின்றனர்.

 

 

யார் இந்த மான்சன்டோ ?;

 

இது அமெரிக்காவை சேர்ந்த வேளாண் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப நிறுவனம். 1901-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2018-ஜூன் 7 வரை இதே பெயரில் இயங்கியது. பின்னர் பேயர் என்ற நிறுவனத்திற்கு கை மாறிவிட்டது.  மான்சாண்டோ முதன் முதலில் 1987-ல் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தது. டி.டி.ட்டி, மற்றும் பி.சி.பி.எஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து சர்ச்சையில் சிக்கியது. 1997-2002 கால கட்டத்தில் அமெரிக்காவில் ரசாயன தொழில் நிறுவனங்களில் முதல் 10 இடங்களில் மான்சான்டோவும் ஒன்று. மான்சாண்டோ மக்காச்சோளம் மட்டுமின்றி, சோளம், பருத்தி, சோயாபீன்ஸ், கோதுமை போன்ற விதைகளையும் சந்தைப்படுத்தி இருக்கிறது. மான்சாண்டோவின் மற்றொரு தயாரிப்பு “ரவுண்ட்அப்” களைக்கொல்லி மருந்து. பயிர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் டிஜிபி மீதான பாலியல் வழக்கு; நாளை தீர்ப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
case against former DGP; Judgment tomorrow

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருக்கிறார்.

Next Story

முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Case registered against former DGP

 

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.