Advertisment

அடுத்த மாதத்தில் 176 உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு! – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு! 

Tamil Nadu Public Service Commission

Advertisment

தமிழ்நாடு நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிகள் 176 காலியாக உள்ளன. முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி நடைபெற்றது, அதன் பிறகு, கடந்த மார்ச் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதன்மை எழுத்து தேர்வு கரோனா நோய் பரவல் மற்றும் அசாதாரண சூழல் காரணமாக ஒத்திவைக்கபட்டிருந்தது.

தற்போது, தேர்வுகள் நடத்த முடிவு செய்திருப்பதால், மீண்டும் அடுத்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள மைய்யத்தில் மட்டும், உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும் என்றும்,இதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையத்தில் விரைவில் வெளியிடப்படுமெனவும்,தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

tnpsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe