தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரண்டு சீசன்களைப் போல் மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மூன்றாவது சீசனில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நபர்களில் முக்கியமான நபர் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு சில இயக்குனர்கள் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் புகழ் பெற்ற இயக்குனர், தேசிய விருது, தமிழக அரசு விருது வாங்கிய இயக்குனர் சேரன் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று பல்வேறு கேள்விகளும் எழுந்தது.

Advertisment

director

இந்த நிலையில் ஃபேஷன் டிசைனர் ஃபைசாகானின் காலண்டருக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்சி அகர்வால் மாடலாக நடித்துள்ளார். அந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களையும், ஃபோட்டோஷூட் வீடியோக்களையும் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட புகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சாக்சி இடம்பெற்ற காலண்டர் பக்கத்தைஇயக்குனர் சேரன் வெளியிட்டார். புகைப்படத்தை வெளியிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த சேரன் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார். மேலும் திரையில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் மற்றும் 96 படங்கள் ஆட்டோகிராஃப் படம் மாதிரி இல்லை என்றும் கூறினார்.