ஏடிஎம் கொள்ளை; ஹரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

Main culprit arrested in Tiruvannamalai ATM robbery incident in Haryana

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 72.5 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை குற்றவாளிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது காவல்துறை. ஹரியானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து திருடுவதில் பயிற்சி பெற்ற குற்றவாளிகள் உள்ளார்கள். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று திருடுவார்கள் என்கிறார்கள். கொள்ளை குற்றவாளிகளைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு, வடமாநிலத்துக்கு ஒரு டீம் பயணம், செல்போன் பதிவுகள் ஆய்வு, வங்கி ஏடிஎம் ஏஜென்சி டீமில் இருப்பவர்களிடம் விசாரணை எனச் சென்று கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹரியானாவைச் சேர்ந்த ஹிரிப்(35) என்பவரை தனிப்படைபோலீசார் தற்போது கைது செய்துள்ளதாகத்தகவல் கிடைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்த தனிப்படை, நியூஜ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிரிப்பை சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும், அவரிடம் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

police thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe