Advertisment

விஷச்சாராய விவகாரம்; முக்கியக் குற்றவாளி கைது!

 main culprit arrested in the case of counterfeiting

Advertisment

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியை போலீசார் புதுச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மரக்காணத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டிலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் விஷச்சாராய உயிரிழப்புகள் 22 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையேஇந்த இரு சம்பவங்களுக்கு காரணமான 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்டவிசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை தான் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலையை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

arrested police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe