Main accused surrendered in Vellore court in rowdy   case

Advertisment

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ரவுடி லோகேஷ் என்பவரை முன்பகை காரணமாக ரவுடி விவேக்கின் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளைத்தேடி வந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் ஏற்கனவே திண்டிவனம் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரவுடி விவேக் என்பவர் இன்று வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நான்கில் சரணடைந்தார். இதனை விசாரித்த நீதிபதி 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து சரணடைந்த விவேக் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தொரப்படியில் உள்ள வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.