டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்வின்போது பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகளும், மகளிர் பிரிவிவைச் சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி ஸ்ரீனிவாசன், "அ.தி.மு.க.வுடனான கூட்டணி நன்றாக உள்ளது; ஆனால் கூட்டணிக்காக அனைத்தையும் சமரசம் செய்ய முடியாது. வேல் யாத்திரைக்கு காவல்துறை தொந்தரவு உள்ளது; தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. அனைவராலும் விரும்பப்படக்கூடிய, ஈர்க்கக்கூடிய கட்சியாக மாறி கொண்டிருக்கிறது." என்றார்.