Advertisment

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும்; மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Mahila Congress struggle Prajwal Revanna should be arrested

Advertisment

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்-அவுட்நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர், மகளிர் அமைப்பினர், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பிரஜ்வால் ரேவண்ணாவின் புகைப்படத்தைத்தீயிட்டு எரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி அருணாச்சலம் மன்ற அலுவலகம் முன்பு தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவி ஹசினா சையத் தலைமையில் பாலியல் புகாரில் சிக்கி, வெளிநாடு தப்பிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவி ஷீலா செலஸ் முன்னிலை வகித்தார்.

Advertisment

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

congress karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe