Advertisment

மகாவீரர் பிறந்த திருநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

mahavirar

Advertisment

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுக்கும் மகாவீரர் பிறந்த திருநாள் வாழ்த்துச் செய்தி:

’’ஜைன சமயக் கோட்பாடுகளில் மனித நேயத்தின் மாண்புகளை மிக முக்கிய சீர்திருத்தமாக உருவாக்கிய வர்த்தமான மகாவீரர் பிறந்த நாள் தமிழகத்தில் ஜைன சமய மக்களால் இன்று மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்ற இந்த மகிழ்ச்சியான நேரத்தில், ஜைன சமய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “மகாவீரர் பிறந்த நாள்” விழா நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாவீரர் தனது இளம் வயதில் அரசாட்சியையும் இல்லற வாழ்க்கையையும் துறந்தவர் என்பது மட்டுமின்றி 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மிகத் தேடலில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியவர் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று அனைத்து உயிரனங்களுக்கும் மதிப்பளித்து நல்லறத்தின் மகானாக விளங்கிய மகாவீரரின் வீரமும், பொறுமையும், தவ வாழ்வும் என்றும் போற்றிப் பாராட்டி கொண்டாடத்தக்கது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, ஜைன சமய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான மகாவீர் பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.’’

Mahavira birthday - congratulations to MK Stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe