மகாத்மா காந்தி நினைவுதினம்- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை! (படங்கள்) 

மகாத்மா காந்தியின் 75- வது நினைவு நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் இன்று (30/01/2022) சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

chief minister death anniversary governor Mahatma Gandhi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe