மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைத்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டனர்.