மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று (27.11.2019) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்க சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். சட்டசபைக்கு வந்த அஜித்பவாரை அவரதுமகள் சுப்ரியா சுலே சிரித்த முகத்துடன் வரவேற்றார்.இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர்புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.