கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு நடை பயணமாகச் செல்ல தொடங்கினர். இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநில எல்லைகளையும் மூட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisment

maharashtra coronavirus tamilnadu person incident

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற 22 வயது இளைஞர் டிப்ளோமா படிப்பை முடித்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதன் காரணமாகப் போக்குவரத்து ரத்தானதால் லோகேஷ் உள்பட 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளனர். மேலும் நாமக்கல் நோக்கி வரும் வழியில் லாரிகளிலும் லோகேஷ் உள்பட 30 பேரும் பயணித்ததாகத் தகவல் கூறுகின்றன.

அதைத் தொடர்ந்து தெலங்கானாவில் பவுன்பாலிக்கு வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் முகாமில் இருந்த லோகேஷ் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment