Advertisment

பொள்ளாச்சி-பல்லடம் சாலைக்கு மகாலிங்கம் பெயர்-தமிழக முதல்வர் அறிவிப்பு

 Mahalingam name for Pollachi-Palladam road- Tamil CM notification

கோவை பொள்ளாச்சி சாலையை பல்லடம் சாலையோடு இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு 'அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை' என பெயரிடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மலரை வெளியிட்டு பேசிய தமிழக முதல்வர், 'மனிதப் பண்பில் சிறந்துடன் செல்வத்தை அறநெறிக்கு பயன்படுத்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம். திருக்குறளை வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவியவர். பொள்ளாச்சி மகாலிங்கத்தை அருட்செல்வர் என்று மட்டும் அல்ல தமிழ்செல்வர் என்று அழைக்கலாம். அவர் நினைவாக கோவை-பல்லடம் இணைப்பு சாலைக்கு 'பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை' என பெயர் வைக்கப்படும்''என்றார்.

Advertisment

pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe