Skip to main content

மாமல்லபுரத்தை இன்று கட்டணமின்றி பார்வையிடலாம்...

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
mahabalipuram

 

 

வருடா, வருடம் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தை கட்டணமின்றி பார்வையிடலாம். மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதம் போன்ற புராதன சின்னங்களை பார்வையிட இன்று கட்டணம் செலுத்த தேவையில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘விளையாட்டு வினையானது’ - சுற்றுலா வந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Tragedy for students who came on tour Mahabalipuram

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 46 கல்லூரி மாணவர்கள் நேற்று (02.03.2024) செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அதன்படி மாணவர்கள் முதலில் அங்குள்ள பல்லவ மன்னர்களின் புராதன சின்னங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கடற்கரைக்குச் சென்று 10 மாணவர்கள் கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென எழுந்த ராட்சத அலையில் 10 மாணவர்களும் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு, கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் மீனவர்கள் விரைந்து வந்து 6 மாணவர்களை மீட்டனர். இவர்களில் விஜய் (வயது 18) கரைக்கு வந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மாயமான மோனிஷ் (19), பார்த்தி (18), ஷேசா ரெட்டி (18), பெத்துராஜ் பிரபு (19) ஆகிய 4 மாணவர்களை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் படகு மூலம் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 4 பேரில் ஷேசா ரெட்டி, மோனிஷ், பெத்துராஜ் பிரபு ஆகிய 3 பேரின் உடல்கள் இன்று (03.03.2024) கடலில் ஒதுங்கியது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.