Skip to main content

மகாமகம், குறிஞ்சி பூ  மாதிரி 12 ஆண்டுகளுக்கு பின் வந்த காவிரி! அனைக்கரையில் திருவிழாக்கோலம்!

Published on 21/08/2018 | Edited on 27/08/2018
c

 

பணிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துக்கொண்டு இருகரைகளையும், கீழனையின் மதகுகளையும் முத்தமிட்டபடி செல்கிறது காவிரிதண்ணீர். அதனை காண்பதற்கு குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக அனைக்கரை கீழனை ’டேம்’ க்கு வந்து கண்டு சந்தோஷமடைகிறார்கள். 

 

ஒருகாலத்தில் தண்ணிரை வாழ்வாதாரமாக கொண்டிருந்த மக்கள் தற்போது காட்சிபொருளாக காண்பதையும் கானமுடிந்தது.  அவர்கள் மீது தவறுஇல்லை.  ஆளும் அரசாங்கங்களின் வஞ்சகம், சூழ்ச்சி, பாராமுகத்தினாலும், இயற்கையின் கொடுமையினாலும் இவ்வளவு நாள் வரண்டு கிடந்தது. கொள்ளிடம்,காவிரி ஆறுகள் என்றாலே அது மணல்  உற்பத்தி செய்யபடும் இடமாகவே   10 ஆண்டுகளாக அறிந்துவந்த செய்தி.     

 

c

 

தென்மேற்குப் பருவமழையினால் காவிரியில் ஏற்படும் வெள்ளபெருக்கை சமாளிப்பதற்கு 1943 ம் ஆண்டு மேட்டூர் அணைக்கட்டப்பட்டது. அதில்இருந்து விநாடிக்கு ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஏழாயிறம் கனடி தண்ணீர் வெளியேற்றும் அமைப்புடன் கட்டப்பட்டது. அதன் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் அளிக்கப்பட்டுவருகிறது.

 

c

 

அதிக வெள்ளபெருக்கு ஏற்படும் காலங்களில் டெல்டா மாவட்டங்களை தண்ணீரி முழ்கடித்து சேதப்படுத்தியது. அந்த வெள்ளநீரின் வடிகாலாக விளங்கிவருகிறது கொள்ளிடம் ஆறு. திருச்சிக்கு மேற்கே 18 வது கிலோமீட்டரில் முக்கொம்பு அருகில் 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சர் ஆர்தர் காட்டன் காலத்தில் கட்டப்பட்டது. சோழமன்னன் கட்டி அசத்திய கல்ணையின் மீது கொண்ட ஈர்ப்பினால், அதுபோலவே பயன்மிகுந்த அனையாக கட்டினான்.

 

அங்கிருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளநீரை தடுத்துநிறுத்தி  செம்மன் பூமியாக காய்ந்துகிடந்த வடார்காடு மாவட்டங்களை பசுமையாக்கும் விதமாக  அனைக்கரை என்னும் இடத்தில் கீழனையை கட்டி வடக்கே, வடக்கு ராஜன் ஆற்றின் வழியாக கடலூர், அரியலூர் மாவட்டங்களும், தெற்கே , தெற்கு ராஜன் ஆற்றின்  மூலம் நாகை, தஞ்சை மாவட்டங்களில் பாசனத்திற்கு பாயசெய்தனர் ஆங்கிலேயர்கள்.

 

c


அப்படி தண்ணீர் மேலாண்மையை வகுத்து பாசனமுறையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த தமிழ்சமுகம் சமீபகாலமாக குடிதண்ணீருக்கே கையேந்தும் நிலையானது. ஆறுகள்,ஏரிகள்,வாய்க்கால்கள், வரண்டு பாளம்,பாளமாக வெடித்து காணப்பட்டது. நிலத்தடி நீர் படுபாதாலத்திற்கு சென்று கடல் நீர்உள்ளே புகுந்தது. முபோகம் விளைந்த காவிரிபடுகை ஒரு போகத்திற்கே வழியில்லாத நிலையானது.

 

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த காவிரி பிரச்சினையில் கர்நாடகமும், நீதிமன்றமும், மத்திய அரசும் பாராமுகத்துடனே துரோகம் செய்து சொற்ப தண்ணீரை வழங்கியது. ஆனால்இயற்கை அதனை தவிடுபொடியாக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. வரலாறு கானாத வகையில் ஒரே ஆண்டில் அதுவும் ஆகஸ்ட் மாதமே இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிறம்பியது. விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து வெளியேற்றப்பட்டது.   ஆனால் முறையான பாசன வசதி இல்லாமல் போனதன் விளைவாக மொத்த தண்ணீரும் கடலுக்கு சென்றது. இதுவரை மணல் திட்டுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கொள்ளிடம் கொண்ட அளவிற்கு தண்ணீர் செல்வதை மனமகிழ்ந்து பார்த்து சந்தோஷம் அடைந்தனர்.


அனைக்கரை பாலத்தில் இளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, கல்லூரி மாணவிகள் முதல் காதலர்கள் வரை அனைக்கட்டில் ஆர்ப்பரித்துவரும் தண்ணீரை கண்டு குதுகளித்தனர். ஓவ்வொருவரும் குடும்பத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.  ஒரு வாரமாக திருவிழா கோலமாகவே அனைக்கரை கானப்படுகிறது.

 

பேரக்குழந்தைகளோடு வந்திருந்த திருப்பனந்தாளை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், ‘’ இதுக்கு முன்னாடி 2005 ம் ஆண்டு இதவிட அதிகமான தண்ணீர் வந்துச்சி, மகேந்திரபள்ளி, குடிதாங்கி உள்ளிட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு 2015 ம் ஆண்டு மூன்று நாள் இது போல தண்ணீர் வந்துச்சி, அது வெள்ளத்தால் வந்த தண்ணீர் அல்ல, பாசனத்திற்கு வந்த தண்ணீரை, அன்றைய தஞ்சை கலெக்கட்டர் மணல் கொள்ளை நடந்த இடங்களை மூடி மறைக்க திறந்துவிட்டார். அதன் பிறகு இப்போது தான் போகுது, தண்ணீரை பார்க்கும் போது என்னன்னமோ தோனுதுங்க, ஆனால் இவ்வளவு தண்ணீரும் பயனில்லாம கடலுக்கு போவதை நினைத்து வேதனையாக இருக்கு. ஒரு காலத்தில் தண்ணீரோடு ஒண்டி உறவாடினோம், இன்று அதிசய பொருளாக, காட்சிப்பொருளாக மாறிவிட்டது.’’ என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.