Skip to main content

தீபத்தை காண ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்தனர்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 1ந்தேதி அண்ணாமலையார் கோயிலுக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் நடைபெற்ற இன்று, திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அண்ணாமலையார் கோயிலுக்குள் வந்து அண்ணாமலையாருக்காக மாலை அணிந்துக்கொண்டனர்.
 

தீபத்திருவிழா நடைபெறும் இந்த 14 நாட்களில் மகா தீபத்தன்று கிரிவலம் அல்லது மலையேறி அண்ணாமலையாரை பக்தியோடு தரிசிக்க வேண்டும் என்பதற்காக மாலை அணிந்துக்கொண்டதாக கூறுகின்றனர்.

maha deepam festival tiruvannamalai district


 

சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் மட்டுமே இப்படி மாலை அணிந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துக்கொண்டதை பார்க்க முடிந்தது. இந்த ஆண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. மகாதீபத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் கோயிலுக்குள் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடதக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலையார் கோவில் விவகாரம்; மிரட்டும் நிர்வாகம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Annamalaiyar temple administration threatened to collect donations

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும், பௌர்ணமியன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வணங்கிவிட்டு கிரிவலம் வருகிறார்கள்.

கோவிலுக்குள் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 முதல் 4 மணி நேரமாகிவிடுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து வரும் வசதியான பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக கோவிலை சுற்றி பலப்பல புரோக்கர்கள் உள்ளார்கள், அவர்களை  அணுகுகிறார்கள். நூற்றுக்கும் குறையாமல் உள்ள இந்த புரோக்கர்கள், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு விரைவு தரிசனம் வேண்டுபவர்களை தனியே அழைத்து செல்கின்றனர். இதற்காக பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம், அதற்கு மேலும் பணம் வாங்குகிறார்கள்.

Annamalaiyar temple administration threatened to collect donations

அண்ணாமலையார் சன்னதி கருவறை அருகே அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது, கோவில் அறங்காவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிலர் மூலமாக அதனையும் செய்கின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து வந்த ஒரு தொழிலதிபர் குடும்பம் கோவிலுக்குள் விரைந்து தரிசனம் செய்யவைக்க 20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளது. அவர்களை சுவாமி தரிசனம் அழைத்து செல்வதில் கோவில் புரோக்கர்களான மண்டி சீனு, ரியல் எஸ்டேட் மற்றும் கோவில் புரோக்கர் குமார் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. கோவிலுக்குள் வைகுந்த வாயில் முன்பு கோவில் என்றும் பாராமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு ஆபாசமான வார்த்தைகளால் அசிங்கமாக இருவரும் மாறிமாறி திட்டிக்கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளுர் மக்களை மட்டுமல்லாமல் வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

வீடியோ வெளியாகி பரபரப்பான நிலையில் கோவிலுக்குள் அநாகரிகமாக நடந்துகொண்டு, பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்திய இருவர் மீதும் கோவில் நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் எதுவும் தரவில்லை. இதுகுறித்து கோவில் ஊழியர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, கோவில் அறங்காவலர் குழு தலைவர், அதிகாரிகளே தவறுக்கு துணைபோகிறார்கள். கடந்த மாசி மாதம் திறக்கப்பட்ட கோவில் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.2.7 கோடி. இவ்வளவு வருமானம் வந்துள்ளது, அவ்வளவு வருமானம் தரும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் என்ன அடிப்படை வசதிகள் செய்து தந்துள்ளார்கள் என்றால் எதுவுமில்லை. கோவிலுக்குள் பக்தர்கள் வரும் வரிசைக்கு சில்வர் கேட் அமைக்கப்போகிறோம், அதற்காக கோவிலுக்கு வரும் வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கித்தாருங்கள் என சிவாச்சாரியார்களை அழைத்து அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணைஆணையர் ஜோதி ரகசிய கூட்டம் போட்டு சொல்லியுள்ளார்கள். 

கோவில் நிதியிலேயே அந்த வேலைகளை செய்யலாம், அதற்கு பதில் நன்கொடை வாங்கித்தாருங்கள் எனக்கேட்கிறார்கள், வெளிப்படையாக கேட்டாலே பலரும் நன்கொடை தரதயாராக இருக்கிறார்கள். அதைமீறி சிவாச்சாரியார்களை ஏஜென்ட்களாக்கியுள்ளார்கள். இப்படி மறைமுகமாக நன்கொடை வாங்குவதன் பின்னால் நன்கொடை கொள்ளை திட்டம் உள்ளதோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது” என்கிறார்கள்.

எதையும் வெளிப்படையாக செய்யாமல் மறைமுகமாக செய்யவேண்டியதன் அவசியம் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்துக்கு எதனால் வந்தது? கோவில் புரோக்கர்களுக்கு கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் துணை போகவேண்டியதன் அவசியம் என்ன? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.