Advertisment

புல்டோசர் யானை இறந்துபோனது... சோகத்தில் யானை விரும்பிகள்.

magna elephant passed away

Advertisment

தமிழக கேரள வனப்பகுதியில், வாயில் காயத்துடன் மக்னா எனும் யானை சுற்றிவந்தது. இது செல்லுமிடமெல்லாம் வழியில் இருக்கும் கட்டிடங்களை இடித்துத்தள்ளி செல்லும். அதனால், இதனைக் கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்கள் ‘புல்டோசர்’ என அழைத்து வந்தனர். தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் அந்த யானை மாறிமாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கேரளாவில் மக்னா யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்றபோது, யானையின் நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் புல்டோசர் யானை வந்ததை அடுத்து, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். புல்டோசர் யானையின் நாக்கு 80 சதவீதம் அறுபட்டு சேதம் அடைந்து இருந்ததால், அந்த யானையால் சாப்பிட முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த புல்டோசரை குணப்படுத்த இயலவில்லை. இதனால் அந்தயானைக்கு வனத்துறையினர் யாரும் சிகிச்சையளிக்க முன்வரவில்லை.

Advertisment

நேற்று சோலையூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் நகர முடியாமல் நின்று கொண்டிருந்த அந்த யானை, உடலில் தெம்பு இல்லாமல் படுத்துவிட்டது.இன்று காலையில் புல்டோசர் எனும் மக்னா யானை உடல் நலக்குறைவினால் பரிதாபமாக உயிரிழந்தது.

Ad

இதையடுத்து கேரள வனத்துறையினர் புல்டோசர் யானையின் உடலை கைப்பற்றி, யானை இறந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூராய்வு செய்யும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களைச்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe