Magna called 'Bulldozer' around the Tamil Nadu-Kerala border

தமிழக-கேரள எல்லையில் வலம்வந்த மக்னா யானை கடந்த சில நாட்களாகவே வாயில் காயத்துடன் திரிந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது.உயிரிழந்த யானைக்கு பழங்குடியின மக்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

Advertisment

சாதாரண காட்டு யானைகளை விட அதிக மூர்க்கத்தனம் கொண்டதாகவும், உருவத்தில் மிகப்பெரியதாகவும் இருக்கக்கூடியவை மக்னாயானைகள்.தமிழக கேரள எல்லையில் சுற்றிவந்த மக்னா யானை வயல் நிலங்களைச் சேதப்படுத்துவதும், வீடுகளையும் இடித்துத்தள்ளுவதுமாக இருந்துள்ளது.இதனால், அப்பகுதிபழங்குடியின மக்களால்அந்த யானைக்கு'புல்டோசர்' என்று பெயரிடப்பட்டது.இப்படிச் சுற்றி வந்த இந்த மக்னா யானை கடந்த மாதம் 15ஆம் தேதி வாயில் ஏற்பட்ட சிதைவு காயத்துடன் சுற்றித் திரிந்ததுகேரள வனத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யானையின்நாக்கு முழுமையாக துண்டிக்கப்பட்டுவாய் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது.மக்னா யானை வாயில் சேதம் ஏற்பட அவுட்டுகாய்எனப்படும் வெடிமருந்துதான் காரணம் எனக்கூறப்படும் நிலையில், சிகிச்சை அளிக்கப்படாமல்மீண்டும் வனத்தில் விடப்பட்டது மக்னா.

Magna called 'Bulldozer' around the Tamil Nadu-Kerala border

கடந்த வாரம் தடாகம் முகாமில் புகுந்த யானை, அங்கிருந்த சமையலறைக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியது. முகாமின் உள்ளேசிலிண்டர் இருந்ததால் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். மீண்டும் தமிழக எல்லையில் இருந்து கேரள எல்லைக்குச் சென்றயானை சோலையூர் மரப்பாலம் பகுதியில் விழுந்து கிடந்தது. மருத்துவர்களும், பழங்குடியின மக்களும் செய்வதறியாமல் சுற்றி நின்றிருந்த நிலையில்துடிதுடித்துப் பரிதமாகஉயிரிழந்ததுமக்னா யானை.உயிரிழந்த யானைக்கு பழங்குடியின மக்கள் தங்களது முறைப்படி இறுதிச் சடங்குகளைச்செய்தனர்.

Advertisment