Advertisment

சேலத்தில் பெண் குழந்தையுடன் இளம்பெண் மாயம்!

miss

சேலம் நரசோதிப்பட்டி ரெட்டியூரைச் சேர்ந்தவர் சம்பத். எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Advertisment

சரண்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. தான் நினைத்த வாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி அடிக்கடி கணவருடன் சண்டையிட்டு வந்தாராம்.

Advertisment

கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து தனது இரண்டு வயது மகள் நிக்ஷிதாவை தூக்கிக்கொண்டு சரண்யா வெளியே சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் தெரியவில்லை. இதையடுத்து அவருடைய கணவர் சம்பத், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காமாணல் போன அன்று சரண்யா கருப்ப நிற சுடிதாரும், குழந்தை நிக்ஷிதா மஞ்சள் நிற ஃபிராகும் அணிந்திருனர். தகவல் தெரிந்தால் சேலம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

child missing girl Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe