/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Magaril urimai thogai.jpg)
அறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்ட விழாவை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பி உட்பட மக்கள் பிரதிநிதிகள் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவை துவக்கி வைத்துள்ளனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மூரார்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சரவண்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு வருகை புரிந்து குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Follow Us