Skip to main content

அதிமுக சார்பில் 30 அமைச்சர்கள்; திமுக சார்பில் 30 முன்னாள் அமைச்சர்கள்-வேலூர் திகுதிகு

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

வேலூரில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்குச் சேகரித்தார்.  அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது,    பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு,  புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை கூறப்பட்ட 19 தவறுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும்.

 

s

 

உருது மொழி பாடப்புத்தகங்கள் அனைத்தும்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.  உருது மொழியிலும் சிறுபான்மையின மக்கள் அவரவர் மொழிகளிலும் தேர்வு எழுத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது’’என்று கூறினார்.

 

அவர் மேலும், வேலூர் தொகுதியில் தேர்தல் கள நிலவர குறித்த கேள்விக்கு,   வேலூரில் 30 அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் திமுக சார்பில் 30 முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - செங்கோட்டையன் 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

admk sengottaiyan talks about admk won 39 parliamentary seat 
கோப்பு படம்

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி விட்டதாகவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபி மொடச்சூர் சாலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல் முறைகேடு, கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் "திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராயம் பெருகிக் கொண்டுள்ளது. அதனால் 21 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் எந்த தீய சக்திகளும் நடமாட முடியவில்லை. அதிமுகவை பொறுத்தவரை இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்ற வரலாற்றை படைப்போம். அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை எவராலும் தவிர்க்க முடியாது.  2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைவதையும் எவராலும் தவிர்க்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பிறகுதான் திமுக விழித்திருக்கிறார்கள். திமுக அரசுக்கு நம்மைப் போன்றவர்கள் கோஷம் போட்டால்தான் விடிகிறது. இல்லை என்றால் விடிவு இல்லை" எனப் பேசினார். 

 

 

Next Story

முதல்வரை கவர்னர் பாராட்டியுள்ளார்... - செங்கோட்டையன் பேட்டி!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Interview

 

'நீட் தேர்வு' பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம், இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில், மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை இன்று (அக். 31ந் தேதி) நடைபெற்றது.

 

அதில், கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும். நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 848 பேர் பயிற்சிக்காகப் பதிவு செய்திருந்தனர். நேற்று மட்டும் கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது அரசுப் பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், மருத்துவராக வேண்டும் என்ற ஊக்கம் உருவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது.

 

நேற்று, மருத்துவக் கல்விக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தமிழக முதலமைச்சரை அவர் பாராட்டியுள்ளார். இந்த அரசு சட்டத்தின் மூலம், 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 5.25 லட்சம் மாணவ மாணவிகள் அரசுப் பள்ளியில் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். தற்பொழுதுள்ள சுற்றுச்சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. திறந்தவெளியில் பள்ளிகள் நடத்தினால் மாணவ மாணவிகள் வெயிலிலும் பனியிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.