maduravoyal Chennai

சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் எம்.பிரிதிவிராஜ். இவரது மனைவி சத்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று, பிரிந்து வாழ்கின்றனர்.

Advertisment

விவாகரத்துப் பெற்ற பின்னர் பிரிதிவிராஜுக்கு திருமணம் நடத்த அவர்களது வீட்டில் பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அறிந்த சத்யாவின் சகோதரர்கள், பிரிதிவிராஜை சத்யாவுடன் சேர்ந்து வாழுமாறு கூறி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் மனமுடைந்த பிரிதிவிராஜ் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிதிவிராஜ் தற்கொலை செய்து கொண்டதை அடுத்துசத்யாவின் சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.