
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் மின்சார ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கிள்ளியாற்றில் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிள்ளியாற்றின் கரையோரம் உள்ள 21 கிராம மக்களுக்கு ஏற்கனவே ஒலிபெருக்கி வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.