Petrol bomb hurled at RSS senior official's house... Madurai also stirs up excitement!

கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஆவார். இவர் மேல அனுப்பானடி பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் இன்று இரவு 7.38 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு சூழ்ந்துள்ளது மதுரையில்.