Advertisment

மதுரையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

madurai youngster versus police incident

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Advertisment

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்ரவுடி ஸ்டீபன்ராஜ். இந்நிலையில், மதுரை போலீசார் இவரை தபால்தந்தி நகரில் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி ஸ்டீபன்ராஜ் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி ஸ்டீபன்ராஜ் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர்.

Advertisment

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரவுடி ஸ்டீபன்ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டீபன்ராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் செயின் பறிப்பு போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஸ்டீபன்ராஜ் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி ஸ்டீபன்ராஜ் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe