madurai young man arrested pocso act

Advertisment

மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகிறார். மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி மதுரை நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதனை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து வைத்துக் கொண்டு தன்னை நம்பிய பெண்ணை நான் கேட்டதைத் தரவில்லை என்று சொன்னால் இந்த காட்சிகளை நான் வலைத்தளத்தில் பதிவிடுவேன், அதே சமயம் உன்னுடைய பெற்றோர்களுக்கும் அனுப்புவேன் என்று கூறி அவரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணமும் பெற்றுள்ளார். நேற்று வழக்கம் போல் அவரை மிரட்டி ரூபாய் 50,000 கேட்டுள்ளார். பீரோவிலிருந்த 50 ஆயிரத்தை அந்தப் பெண் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பணம் காணாமல் போனதைக் கண்ட பெற்றோர் அதிர்ந்து போய் பணம் யார் எடுத்தது நான் காவல்துறையிடம் புகார் அளிக்கப் போகிறேன் என்று தந்தை மிரட்டியதும் நடந்த அத்தனை விஷயங்களையும் பெண் கூறியிருக்கிறார்.

பெண் வாக்குமூலத்தின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் சந்துருவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.