Advertisment

கணவனை கொடூரமாக தாக்கி கொன்றது ஏன்? போலீசில் மனைவி வாக்குமூலம்...

police investigation

மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயாண்டி நகரை சேர்ந்தவர் சுந்தர் (39). என்ஜினீயரான இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருட்செல்வம் (32) தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது.

Advertisment

சுந்தர் நேற்று முன்தினம் கட்டிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக மனைவி அருள்செல்வம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்' டாக்டர்கள் பரிசோதனையில் சுந்தர் இறந்து தெரிய வந்தது. உடலில் மர்ம உறுப்பு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருக்கவே சந்தேகமடைந்த போலீசார் மனைவி அருள்செல்வத்திடம் விசாரித்தனர்.

Advertisment

சுந்தர் மது போதையில் வந்து ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், சம்பவத்தன்றும் மகள் முன்பு உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும், அதனால் வெறுப்படைந்து கணவரை கொன்று விட முடிவு செய்ததாக அருட்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று தனது சித்தி பாலாமணி - அவரது மகன் சுமேர் உதவியுடன் கணவர் சுந்தரை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுந்தர் மனைவி அருட்செல்வம், அவரது சித்தி பாலாமணி அவரது மகன் சுமோர் ஆகியேரர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

husband incident madurai Police investigation tirumangalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe